name='description'/> கடிநெல்வயல் வை.வேதரெத்தினம் வலைப்பூ !: காலச் சுவடுகள் (19) : 1972 நிகழ்வுகள் - அப்துல் அலிம்

காலச்சுவடுகள் ! வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதை பற்றிய வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

Sunday, March 29, 2020

காலச் சுவடுகள் (19) : 1972 நிகழ்வுகள் - அப்துல் அலிம்


தமிழ்ப் பணி மன்ற ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதும் தன்வரலாறு (AUTOBIOGRAPHY) !

காலச் சுவடுகள் :1972 நிகழ்வுகள்
(சுவடு.19) அப்துல் அலிம் !

 ---------------------------------------------------------------------------------------------

திருமண நிகழ்வுகளில் பின்பற்றப்படும் சடங்குகள்அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  ஊருக்கு ஊர் மாறுபடுகிறதுகுலத்துக்குக் குலம் மாறு படுகிறதுமதத்துக்கு மதம் மாறு படுகிறதுசடங்குகள் தான் மாறுபடுகின்றனவே தவிரஒரு ஆண் ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொள்ளும் நிகழ்வை உற்றார் உறவினர்களுக்குச் சொல்லி வெளிப்படையாக நடத்தி வைக்கும் அடிப்படைக் கருத்தில் மாற்றம் கிடையாது !

திருவெறும்பூர்தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்தில் உதவியாளராகப் பணி புரிந்து வந்தவர் செல்விபத்மினிஅவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்அவர் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன்பயிற்சி நிலையத்திலிருந்து நிரம்ப அலுவலர்களும் வந்திருந்தார்கள்சின்னச் சின்னச் சடங்குகள் சில முடிந்த பிறகுதாலி கட்டும் நிகழ்வுக்கான நேரம் நெருங்கியது.  மணமேடை அருகே நின்று கொண்டிருந்த சிலர் மணமக்களின் இருக்கையைச் சுற்றிலும் ஒரு வெள்ளைத் திரையை விரித்துத் பிடித்து மணமக்களை  முழுமையாக மறைத்துக் கொண்டனர் !

திரையால் சூழப் பெற்ற இருக்கைகளில் மணமக்கள் அமர்ந்திருக்கும் நிலையில்மணமகன் மணமகளுக்குத் தாலி அணிவித்தார்தாலி அணிவிக்கப் பெற்றது என்பதைஏழில் (நாதசுரம்இசையின் கதுமென்ற எடுப்பொலி (திடீரென்ற உயர் ஒலிப்புதான் எங்களுக்கு உணர்த்தியதே தவிரதாலி அணிவித்ததை அரங்கில் குழுமியிருந்த யாரும் பார்க்க முடியவில்லை !

நாயுடு வகுப்பினர் திருமணங்களில் இவ்வாறு திரை சூழ்ந்த மணவறைக்குள் தாலி கட்டும் முறை தான் பின்பற்றப்படுகிறது என்றும்அவர்கள் தங்கத்தால் ஆன தாலியைக் கூடப் பயன்படுத்துவது இல்லை என்றும்அதற்கு மாற்றாக கருகமணி அணிவித்தல் தான்  அவர்கள் வழக்கம் என்றும் என் பக்கத்தில் அமர்ந்து இருந்த நண்பர் ஒருவர் விளக்கம் சொன்னார் !

நாயுடு வகுப்பினரின் திருமணங்களில் இதற்கு முன் நான் கலந்து கொண்டதில்லை என்பதால்எனக்கு இம்மரபு மிகவும் புதுமையாக இருந்தது.  இதலால்   நான் மிகுந்த வியப்புக்கு உள்ளானேன் !

திருவெறும்பூரில் ‘சலால்’ வளவில்  (JALAL COLONY) குடியிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் உறவினர் திருமணம் திருச்சியில் நடைபெற்றதுஅவர் இசுலாமியர்அவரை அழைப்பை ஏற்றுதிருமணத்திற்குச் சென்றிருந்தேன்மணமகன்முகத்தை மறைக்கும் மலர் ஒப்பனையுடன் அமர்ந்திருந்தார்ஒரு பெரியவர் மணமகனுக்கு அருகில் அமர்ந்து தொழுகை நடத்தினார்பத்து நிமிடங்கள் ஆகி இருக்கும்மணமகளை அழைத்து வந்து மணமகனுடன் அமர வைப்பார்கள் என்று மனதிற்குள் ஒரு எதிர் பார்ப்புடன் காத்திருந்தேன் !

அந்தப் பெரியவர் மணமகனிடம் ஒரு பதிவேட்டில் கையொப்பம் பெற்றார்பின்பு அந்தப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு வேறொருவர் உள்ளே சென்றார்சென்றவர் சில நிமிடங்களில் திரும்பி வந்துஅந்தப் பதிவேட்டைப் பெரியவரிடம் கொடுத்தார்அவ்வளவு தான் !

இரண்டு மூன்று பேர்தமது கைகளில் வைத்திருந்த துண்டிலிருந்துஉலர்ந்த பேரீச்சம்பழம்கற்கண்டு ஆகியவற்றை அள்ளி அங்கே குழுமியிருந்த மக்களின் மீது மழை போல் பொழிந்தார்கள்சில நொடிகளில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து கொள்ளவிருந்து  உண்பதற்கு இலைகள் போடப்பட்டன !

என் நண்பரிடம் சென்று, ”மணமகளை இங்கு அழைத்து வரவும் இல்லைதாலி அணிவிக்கவும் இல்லைஆனால் திருமணம் முடிந்து விட்டது போல் தோன்றுகிறதேவிருந்துக்கு இலைகள் போடப்படுகின்றனவே” என்று கேட்டேன் !

நீங்கள் இசுலாமியர் வீட்டுத் திருமணங்களைப் பார்த்ததில்லையா ?” என்று நண்பர் கேட்டார். “பார்த்ததில்லை” என்றேன். ”உங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணங்களில் மணமகன்மணமகள் இருவரையும் ஒன்றாக அமர வைத்துத் தாலி அணிவிப்பார்கள் !

எங்கள் வழக்கப்படிமணமகன்மணமகள் இருவரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருப்பார்கள்இருவரிடமும் பதிவேடுகளில் கையொப்பம் பெறப்படும்அதைக் குழுமியுள்ள மக்களிடம் திருமணத்தை நடத்தி வைப்பவர் முறைப்படி அறிவிப்பார்அத்துடன் திருமண நிகழ்வுகள் நிறைவு பெறும்” என்றார் !

மணமகன் கூட மணமகளைக் காண முடியாதா ?“ “திருமண நிகழ்வுகளின் போது காண முடியாது” இந்தத் திருமணச் சடங்கு பற்றி முன்னதாக எனக்குப் போதுமான புரிதல் இல்லை என்பதால்எனக்கு மிகவும் வியப்பை தந்தது !

இராசு என்பவர் பார்ப்பனர் குலத்தைச் சேர்ந்தவர்அவர் திருமணமும் திருச்சியில் தான் நடைபெற்றதுதிருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களுள் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த  திரு.நா.நாகராசன் என்பவரும் ஒருவர்புதுக்கோட்டைதொழிற் பயிற்சி நிலைய  அலுவலகத்தில் நான் பணிபுரிந்த போது அவரும் அங்கு பணிபுரிந்திருக்கிறார்அவரும் பார்ப்பனர் குலத்தவர்மாப்பிள்ளை திரு.இராசுவும் திரு.நாகராசனும் நெருங்கிய நண்பர்கள் !

திருமணச் சடங்கின் போது மாப்பிள்ளைக்குப் புதுச் செருப்பு தந்து அணிந்து கொள்ள சொன்னார்கள்அவர் அதை அணிந்து கொண்டதும்ஒரு  குடையை விரித்து அவரிடம் கொடுத்துப் பிடித்துக் கொள்ள வைத்தனர்அத்துடன் கையில் ஒரு விசிறியையும் தந்தனர் ! இந்தக் கோலத்தில் மாப்பிள்ளை மண்டபத்தை விட்டு வெளியே சென்றார்காசி நகருக்குப் பயணம் செல்கிறாராம் !

வெளியே சென்ற மாப்பிள்ளையிடம் மணப்பெண்ணின் தந்தை ஏதோ சொல்லிக் கெஞ்சுவதை மண்டகத்திற்குள் இருந்து என்னால் மார்க்க முடிந்தது.  பக்கத்தில் இருந்தவரிடம் வெளியில் நடப்பதைச் சுட்டிக் காட்டி,  என்ன சிக்கல்” என்று வினவினேன்அவர் ”சிக்கல் ஒன்றுமில்லை இது ஒரு சடங்குமாப்பிள்ளை கோபித்துக்கொண்டு காசிக்குச் செல்கிறார்வருங்கால மாமனார் அவரை வழிமறித்துஎன் பெண்ணை உங்களுக்கு மணம் முடித்துத் தருகிறேன்காசிக்குச் செல்ல வேண்டாம்திரும்புங்கள் என்று கூறிக் கெஞ்சுகிறார்” என்றார் !

இந்தச் சடங்கும் எனக்கு வியப்பாக இருந்தது ! காசிக்குப் பயணம் செல்லவிருந்த மாப்பிள்ளையைச் சமாதானம் செய்து அவரது வருங்கால மாமனார் மண்டகத்திற்குள் அழைத்து வந்துவிட்டார்ஓரிரு நிமிடங்கள் சென்றிருக்கும்நண்பர் நாகராசன் உரத்த குரலுடன் சண்டை போடுவது தெரிந்தது !

அவரிடம் சென்று, “என்ன புலனம் (விஷயம்) ? ஏன் சண்டை போடுகிறீர்கள் ?” என்று கேட்டேன். ”நான் மாப்பிள்ளை வீட்டுக் காரன்என்னிடம் பெண் வீட்டுக் காரர் ஒருவர் வந்து சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்கிறார்மாப்பிள்ளை வீட்டுக்காரரை இப்படித்தான் பண்புக் குறைவாக நடத்துவதா ?” என்றார் !

நான் அவரிடம், “அதில் என்ன தவறு” என்றேன். “சாப்பிட வாருங்கள் என்று அழைக்காமல் சாப்பிட்டு விட்டீர்களா என்று எப்படிக் கேட்கலாம்”, என்றார் அவர்பெண் வீட்டைச் சேர்ந்தவர்நண்பர் நாகராசனின் கைகளைப் பற்றிக் கொண்டு  நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுநான் செய்தது தவறுஎன்னை மன்னித்து விடுங்கள்” என்று கெஞ்சினார். ”சரி ! சரி ! இனிமேல் இப்படியெல்லாம் பண்பாட்டுக் குறைவாக நடக்கக் கூடாதுசெல்லுங்கள்” என்று கூறி அவரை அப்புறப்படுத்தினார் !

நண்பர் நாகராசனிடம் நான் கேட்டேன், “நண்பரே ! சிறிய புலனம் (விஷயம்) ! அதற்குப் போய் இப்படிக் கோபித்துக் கொண்டு சண்டை போடலாமா ?”  எங்கள் சடங்குகள் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாதா ? திருமண வீட்டில் இப்படி ஏதாவது சண்டைபோட்டுக் கொள்வது ஒரு மரபுநான் உண்மையிலேயே சண்டை போட வில்லைசண்டை போடுவதாக நடித்தேன்அவ்வளவுதான்” என்றார்வியப்புக்குரியவை இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றவோ என்று நான் மலைத்துப் போய் நின்றேன் !

தாலி கட்டும் நேரம் நெருங்கியது. மணமகளின் தந்தை வந்து மணைப் பலகையில் அமர்ந்தார்.  மணக்கோலத்தில் ஒப்பனையோடு இருக்கும் மணமகள் அங்கு வந்து தந்தையின் மடியில் அமர்ந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை கைகளில் தாலியுடன் எழுந்து நின்று மணமகளுக்குத் தாலி அணிவித்தார். ஆகா ! இது என்ன புதிய மரபு ? பார்ப்பனர் குலத் திருமணங்களில் நம்மை வியக்க வைக்கும் மரபுகளுக்கு வறுமை இருக்காது போலும் !

தாலி கட்டும் நிகழ்வை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில்ஒரு பெண்மணிதன் அருகில் இருந்த ஒளியுருக்கு (STAINLESS STEEL)க் குடிகுவளை (TUMBLER)  ஒன்றை எடுத்துத் தன் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தார்நண்பர் நாகராசனிடன் இந்தக் காட்சியைக் காண்பித்தேன்அவர் “கண்டு கொள்ளாதீர்கள்அவர் மாப்பிள்ளையின் சித்தி தான்திருமண வீட்டில் இருந்து இவ்வாறு ஏதாவது ஒரு பொருளைத் திருடிச் செல்வதும் ஒரு மரபு” என்றார்எனக்குத் தலை சுற்றியதுபார்ப்பனர் குலத் திருமணங்களில் என்னென்னவோ நடக்கிறதே ! மீண்டும் எனக்கு வியப்புத் தான் !

திருவெறும்பூரில் என்னுடன் பணி புரிந்த நண்பர் தஞ்சாவூர் அப்துல் அலிம் திருமணம் திருச்சியில் நடைபெற்றதுஎந்த ஆண்டு என்பது நினைவில்லைதிருச்சி சங்கிலியாண்டார்புரம் அருகில் உள்ள ஒரு மசூதியில் நடந்ததாக நினைவுஅது மசூதியாபள்ளிவாசலா என்பது நினைவில்லைதிருவெறும்பூர் அலுவலக நண்பர்கள் நாங்கள் ஒரு பத்துப் பேர் ஒரு குழுவாகத் திருணத்திற்குச் சென்றிருந்தோம் !

திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தபடி  அந்த  இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்அங்கு குழுமியிருந்தோர் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டதுஅவர்களில் ஒருவரிடம் சென்று மாப்பிள்ளையின் நண்பர்கள் என்று எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு மாப்பிள்ளை எங்கிருக்கிறார் என்று உசாவினோம் !

ஒரு வீட்டைக் காண்பித்து மாப்பிள்ளை அங்கு தான் இருக்கிறார் என்றார்அந்த வீட்டிற்குச் சென்றோம்வீட்டில் இருந்த ஒருவர் எங்களை வரவேற்று அமர வைத்து விட்டுமாப்பிள்ளையிடம் செய்தி சொல்லி வருகிறேன் என்று உள்ளே சென்றார்சென்றவர் திரும்பி வந்துசெய்தி சொல்லிவிட்டேன்மாப்பிள்ளைக்கு மலர் ஒப்பனை நடந்து கொண்டிருக்கிறது சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சொல்லிச் சென்றார் !

அரைமணி நேரம் ஆயிற்றுமாப்பிள்ளை வரவில்லை;  இப்படிக் காக்க வைத்து விட்டாரே என்று எங்களுக்குக் கோபம் கோபமாக வந்தது ! நாற்பது நிமிடம் கழித்து மலர் ஒப்பனையால் மூடிய முகத்துடன் மாப்பிள்ளை வந்தார்செல்லமாக அவருடன் ஒரு சண்டை போட அணியமானோம்மாப்பிள்ளை அவரது நண்பர்கள் புடை சூழ எங்கள் அருகில் வந்துமுகத்தை மூடியிருந்த மலர்ச் சரங்களை விலக்கினார் !

 ! இவர் அப்துல் அலிம் இல்லை  எங்கள் மனதுக்குள் விழிப்பு மணி ஒலித்ததுஆளுக்கு 25 மி.லிவிளக்கெண்னெய் குடித்தது போல் நாங்கள் பத்துப் பேரும் விழித்தோம்மாப்பிள்ளையின் நிலையும் எங்களைப் போன்றே இருந்தது !

முதலில் நான் தான் விழிப்படைந்துஎங்கள் நண்பர் அப்துல் அலிம் திருமணத்திற்கு வந்தோம்அப்படியேஇன்னொரு திருமணமும் இங்கு நடப்பதை அறிந்து உங்களுக்கும் வாழ்த்துச் சொல்லி வருவோம் என்று இங்கு வந்தோம்நல்வாழ்த்துகள் மாப்பிள்ளை ! வாழ்க வளமுடன் ! என்று சொல்லிக் கைகுலுக்கினேன்மற்ற நண்பர்களும் இவ்வாறே கைகுலுக்கிச் சமாளித்தனர் !

திரும்பவும்மசூதி / பள்ளி வாசலுக்கு வந்தோம்அங்கு நண்பர் அப்துல் அலிம் திருமணம் நிறைவடைந்து இருந்ததுஅவருக்குத் திருமண வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுநடந்த நிகழ்வுகளை அவரிடம் சற்று நேரம் சொல்லிச் சிரித்து மகிழ்ந்தோம் ! மறக்கமுடியாத துய்ப்பு (அனுபவம்) !

இந்நிகழ்வு நடைபெற்று ஏறத்தாழ நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கலாம் ! இன்றும் கூட  அது பசுமையாக என் நினைவில் நிலைத்து நிற்கிறது ! மறக்க முடியாத இந்த இனிய நினைவுகளின்  கதைமாந்தன் (கதாநாயகன்)  நண்பர் அப்துல் அலிம் அவர்கள் தற்போது அரியானா மாநிலம் பானிபட் நகரில் வாழ்ந்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன் !  எங்கிருந்தாலும் வாழ்க !  வளர்க அவரைப் பற்றிய இனிய நினைவுகள் !

-----------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(kadikaivedarethinam@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி2051, மேழம் (சித்திரை),25]
{08-05-2020}
----------------------------------------------------------------------------------------------


அப்துல் அலிம்

முகத்தை மூடிய மலர் 
ஒப்பனையுடன் மாப்பிள்ளை !

 ஐயர் வீட்டு மாப்பிள்ளை 
காசிக்குப் பயணம் 
போகிறார் !


 தந்தையின் மடியில் மகள்
 அமர்ந்திருக்க, 
மாப்பிள்ளை நின்று கொண்டு 
தாலி கட்டுகிறார் !
  
மகள் தந்தையின் மடியில் ! 
மாப்பிள்ளை கைகளில் தாலியுடன் !  
ஐயர் வீட்டுத் திருமணம் !







No comments:

Post a Comment